மேற்கு வங்க மாநிலத்தில் நாளை திங்கட்கிழமை 7ஆம் கட்ட வாக்குப்பதிவு... 653 கம்பெனி மத்திய படை பாதுகாப்பு

0 3312

மேற்கு வங்காளத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் 7 - வது கட்ட வாக்குப்பதிவையொட்டி தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில்,  653 கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 7 - வது கட்டமாக 5 மாவட்டங் களை உள்ளடக்கிய 34 தொகுதிகளில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களில் Malda, Murshidabad மற்றும் South Dinajpur ஆகிய 3 மாவட்டங்களில் பங்களாதேஷ் எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், ஊருடுவலை முறியடிக்க கண்காணிப்பை பலப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments