நாளை திங்கட்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு எனத் தகவல்

0 6177
நாளை திங்கட்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு எனத் தகவல்

தமிழகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக விவாதிக்க நாளை திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் காலை ஒன்பதே கால் மணிக்குக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், உற்பத்தியைத் தொடங்க அனுமதிப்பதா? வேண்டாமா என்பது பற்றியும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments