ஈராக் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 82 பேர் உயிரிழப்பு
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாக்தாத்தில் தியாலா பிரிட்ஜ் பகுதியிலுள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விபத்துக்குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன.அந்த மருத்துவமனையில் தீ தடுப்பு சாதனங்கள் இல்லாததால், தீயை அணைக்க தாமதமானதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. தீ விபத்தால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சிக்கி ஏராளமான கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த பயங்கர விபத்துக்கு குறித்து விசாரணை நடத்த ஈராக் பிரதமர் முஸ்தப்பா அல் காதினி உத்தரவிட்டுள்ளார்.
Comments