இந்தியாவுக்கு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்... அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய வம்சாவளி எம்பி கோரிக்கை
இந்தியாவில் கொரோனா அலை படுவேகமாக வீசுவதால், அமெரிக்காவில் இருந்து ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை உடனே அனுப்பி வைத்து உதவ வேண்டும் என இந்திய வம்சாவளி எம்பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 4 கோடி டோசுகள் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து இருப்பு இருப்பதை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவை தற்போது யாருக்கும் பயன்படாமல் இருக்கும் நிலையில், கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு அவற்றை அனுப்பி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் வராமல் கட்டுப்படுத்தி, பொது சுகாதாரத்தையும், அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் காக்க, இருப்பு உள்ள ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை உடனடியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்க வேண்டும் என அவர் பைடன் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments