கொரோனாவை மத்திய அரசு கையாளும் விதத்தை விமர்சித்து பதிவேற்றம் செய்யப்பட்ட 50 க்கும் அதிகமான பதிவுகளை நீக்கியது டுவிட்டர்

0 2743
கொரோனாவை மத்திய அரசு கையாளும் விதத்தை விமர்சித்து பதிவேற்றம் செய்யப்பட்ட 50 க்கும் அதிகமான பதிவுகளை நீக்கியது டுவிட்டர்

கொரோனாவை மத்திய அரசு கையாளும் விதத்தை விமர்சித்து பதிவேற்றம் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பதிவுகளை, டுவிட்டர் நிர்வாகம் நீக்கி உள்ளது. மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் இந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் மருந்து, படுக்கைகளுக்கு பற்றாக்குறை உள்ளது போலவும், எரியூட்ட வழியின்றி பல உடல்கள் சேர்ந்து தகனம் செய்யப்படுவதாகவும் இந்த பதிவுகளில் விமர்சனங்கள் இருந்தன.

பெருந்தொற்று காலத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூடியது பற்றிய பதிவுகளும் இவற்றில் அடக்கம். சில காங்கிரஸ் தலைவர்கள், திரிணமூல் மேற்குவங்க அமைச்சர் ஒருவர், செய்தியாளர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலரின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த பதிவுகளை இந்தியாவில் நீக்கினாலும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் அவற்றை பார்க்க முடியும் எனவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments