தமிழகத்தில் நாளை முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு - மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முதல் ஏப்ரல் 30 வரை வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கான வழிகாட்டுதல்களைக் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வங்கிக் கிளைகளின் அலுவல் நேரம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத அலுவலர்கள் வழக்கமான பணி நேரப்படி பணியாற்றுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆதார் பதிவு மையங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஏடிஎம்கள், பணம் செலுத்தும் இயந்திரம் ஆகியன செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments