விசாகப்பட்டினத்தில் இருந்து ஏழு கண்டெய்னர்களில் 24 மணி நேரத்தில் 150 டன் ஆக்சிஜனை ஏற்றி வந்த விரைவு ரயில்கள்
விசாகப்பட்டினத்தில் இருந்து ஏழு கண்டெய்னர்களில் ஆக்சிஜன் நிரப்பி வந்த முதல் எக்ஸ்பிரஸ் ரயில் நாக்பூருக்கு வந்ததைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மேலும் சில ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.
இதில் மூன்றாவது ரயிலும் ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு லக்னோ வந்து சேர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரயில்கள் மூலம் மகாராஷ்ட்ரா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு 150 டன்கள் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நாக்பூரிலும் வாரணாசியிலும் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இறக்கிவிடப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments