கொரோனா பரிசோதனை செய்வோர், பெருந்தொற்று நோயாளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்
கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கும், பெருந்தொற்று நோயாளிகளுக்கும், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை, முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல், வாசனை உணர்வு இல்லாமல், சுவை உணர இயலாமை, வயிற்றுப் போக்கு போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகள் ஆகும். இரத்த ஆக்சிஜன் அளவை அறிய குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்தால் ஆக்சிஜன் கொடுப்பது அவசர அவசியம் ஆகும்.
ஆக்சிஜன் அளவு 90க்கும் அதிகமாக இருந்தால் வீட்டிலேயே தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். கொரோனா அறிகுறி இருந்தாலோ, அல்லது பணி நிமித்தம், வெளியூர் பயணங்கள் நிமித்தம், ஆர்டீ-பிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை செய்தால், முடிவு கிடைக்கும் வரை, சுயதனிமை அவசியம் ஆகும்.
கொரோனா நோயாளிகள் தாங்களாகவே, ரெம்டெசிவர் மருந்தை எடுத்துக் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Comments