புதிதாக ஆக்சிஜன் மையங்கள் அமைக்க பிரதமரின் சார்பில் பல மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு... டெல்லி, மராட்டிய அரசுகள் அலட்சியம்?
டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு, ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க, பல மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு செய்தும், அவற்றை அம்மாநிலங்கள் கட்டமைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
32 மாநிலங்களில், 162 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து, சுமார் 202 கோடி ரூபாய், கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 8 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க டெல்லியும், 10 பிராணவாயு உற்பத்தி நடுவங்களை அமைக்க மகாராஷ்டிராவும், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து, பணம் பெற்றன.
ஜனவரியோடு சேர்த்து சற்றேறக்குறைய 4 மாதங்கள் ஆகும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஒரே ஒரு ஆக்சிஜன் உற்பத்தி அலகினை மட்டுமே அமைத்துள்ளது. மகாராஷ்டிரா இதுவரையில் ஒரு ஆக்சிஜன் மையத்தை கூட புதிதாக அமைக்கவில்லை.
Comments