வழக்கமான ஃபிரீசர்களில் சேமிக்கும் வகையில் புதிய தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த உள்ளோம்: ஃபைசர் நிறுவனம்
வழக்கமான ஃபிரிட்ஜ்கள் மற்றும் ஃபிரீசர்களில் சேமித்து வைக்கும் வகையிலும், உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏற்ற திரவ வடிவிலும் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலையில் வைக்க வேண்டும் என்பதால், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் புதிய வடிவில் வர உள்ள தடுப்பு மருந்தை வழக்கமான குளிர்பதன நிலையிலேயே சேமித்து வைக்க முடியும் என ஃபைசர் சிஇஓ Albert Bourla தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி 100 சதவீதம் சிறப்பாக வேலை செய்வதாகவும், இந்திய வகைக்கு எதிராகவும் தங்களது தடுப்பூசி திறனுடன் செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உருமாற்றத்திற்கு ஏற்ற வகையில், தடுப்பூசியை புதிதாக 100 நாட்களில் உருவாக்கிடும் உயிரித் தொழில்நுட்பம் தங்கள் வசம் உள்ளதாகவும் Pfizer சிஇஓ Albert Bourla கூறியுள்ளார்.
Comments