"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று , 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக மின்சார ரெயில் சேவை குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்றும், 16 பயணிகள் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Comments