மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசு விளக்கம்
மாதவிடாய்க்கு 5 நாட்கள் முன்னரோ அல்லது பின்னரோ பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது என சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் என்பதால் தடுப்பூசி போட வேண்டாம் என வெளியாகும் தகவல் வெறும் வதந்தி என்றும் இதை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதைப் போன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு வரும் 28 ஆம் தேதி மட்டுமே துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments