44 ஆண்டுகள் பழமையான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் கடலில் மாயம் - கப்பலில் இருந்த 53 பேரின் நிலை கேள்விக்குறி
பாலி கடலில் மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகளில் அமெரிக்க கடற்படை Poseidon ரக விமானத்தை களமிறக்கியுள்ளது.
கடந்த 21 ஆம் தேதி, KRI Nanggala என்ற நீர்மூழ்கி கப்பல் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது. அதனை தேடும் பணிகளில் இந்தோனேசிய கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆஸ்திரேலிய போர்கப்பல் ஈடுபட்டுள்ளன.
நீர்மூழ்கி கப்பல் பயணித்த தடத்தில் அதிக காந்த சக்தி கொண்ட பொருளும், எண்ணெய் கசிவும் தென்பட்டதாக கடற்படை தளபதி தெரிவித்தார்.
சனிக்கிழமை அதிகாலையுடன் நீர்மூழ்கி கப்பலில் ஆக்ஸிஜன் இருப்பு தீர்ந்து விடும் என்பதால் அதில் உள்ள 53 பேரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
Comments