கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை அண்ணா நகர் பெரிபெரல் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், சென்னை அண்ணா நகர் பெரிபெரல் அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படவுள்ளது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக அரசு கூறியுள்ளது.
இருப்பினும், இனிவரும் காலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்குமென்பதால், அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், அண்ணா நகர் பெரிபெரல் மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலன் சோதனை முறையில் அமைக்கப்படவுள்ளது.
சென்னையில் அரசு மருத்துவமனைகளில் தற்போது 3,319 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உள்ளது. இந்த நிலையில், கூடுதலாக 2400 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
Comments