உத்தரக்கண்ட் : நிதி பள்ளத்தாக்கு பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உடல்கள் கண்டெடுப்பு , 384 பேர் மீட்பு என ராணுவம் தகவல்
உத்தரக்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும், 384 பேர் மீட்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
உத்தரக்கண்ட் சாமோலி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகக் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் இருந்தது.
இந்நிலையில் நிதி பள்ளத்தாக்கில் சும்னா என்னுமிடத்தில் பனிப்பாளங்கள் சரிந்ததில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
ராணுவம், இந்தோ திபெத் எல்லைக் காவல்படை, எல்லைச் சாலைகள் அமைப்பு ஆகியவை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களைக் கண்டெடுத்துள்ளதாகவும், 384 பேரை மீட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments