2 லட்சம் ரெம்டிவிசர் குப்பிகள் இறக்குமதி செய்யவும் வெண்டிலேட்டர் கையிருப்பை பத்து மடங்கு அதிகரிக்கச் செய்யவும் கர்நாடக அரசு முடிவு
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் 2 லட்சம் ரெம்டிவிசர் குப்பிகளை இறக்குமதி செய்யவும் வெண்டிலேட்டர் கையிருப்பை பத்து மடங்கு அதிகரிக்கச் செய்யவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
2 லட்சம் ரெம்டிவிசர் இறக்குமதி செய்ய மத்திய அரசின் அனுமதியை கர்நாடக அரசு கோரியுள்ளது. ரெம்டிவிசர் மருந்தை உற்பத்தி செய்ய உள்நாட்டு மருந்துத் தயாரிப்பாளர்களுடனும் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தினசரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ரெம்டிவிசர் கிடைப்பதாகவும் மத்திய அரசு தினசரி 25 ஆயிரம் குப்பிகள் வரை விநியோகம் செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் இன்னும் 15 நாட்களுக்குள் 2000 தற்காலிக ஐசியு படுக்கைகள் தயாராகிவிடும் என்றும் இதில் 800 படுக்கைகளுக்கு வெண்டிலேட்டர் வசதி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments