காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை கழுத்து அறுத்த கொடூரம் - தப்ப முயன்ற நபர் போலீசாரால் சுட்டுக் கொலை

0 6202
காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை கழுத்து அறுத்த கொடூரம் - தப்ப முயன்ற நபர் போலீசாரால் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் காவல் நிலையத்தில் நிர்வாகப் பணி புரியும் பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

மீண்டும் பிரான்ஸ் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்று அதிபர் இமானுவேல் மாக்ரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்டீபனி என்ற பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் எங்கிருந்தோ வந்த ஒருவன் கத்தியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தை வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது.

கத்தியால் குத்தியவன் மத அடிப்படைவாதி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments