கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரம்

0 3268

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழியும் அதனுள் எலும்பு மற்றும் வாள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்கு 7ம் கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று கொந்தகையில் நடந்த அகழாய்வில், மனித எலும்புக்கூடுகள், 30 சென்டி மீட்டர்  நீளமுடைய இரும்பினாலான கூர்மையான வாள், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட கூம்பு வடிவ கிண்ணம், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட வட்ட வடிவ கிண்ணம் கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழி 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தற்போது நடந்து வரும் 7ம் கட்ட அகழாய்வில் பகடைக்காய், மண் ஓடுகள் ,பாசிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments