உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இன்று பதவியேற்பு
உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இன்று பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ் ஏ போப்டே ஓய்வுபெற்றார். நேற்று நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசிய அவர், தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் ஓய்வு பெறுவதாக கூறினார். உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக 22 ஆண்டுகள் அவர் சேவை செய்துள்ளார்.
Comments