நடிகை தங்கையின் ஆடைகளை கிழித்து மானபங்க கொடுமை..! வீதியில் அரங்கேறிய அத்துமீறல்

0 21748
நடிகை தங்கையின் ஆடைகளை கிழித்து மானபங்க கொடுமை..! வீதியில் அரங்கேறிய அத்துமீறல்

சின்னத்திரை நடிகை ஜெனிபரையும் அவரது தங்கையையும் வீதியில் வைத்து சினிமா உதவி இயக்குனர் குடும்பத்துடன் அடித்து ஆடைகளை கிழித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் மணலியை சேர்ந்த ஜெனிபர்.

ஜெனிபர் தனது முதல் கணவர் சரவணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள போது, தொலைக்காட்சி சீரியல் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.

முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், நவீன் குமாரை திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். காதலித்து வந்த நவீன் குமாருக்கு வேலை பறிபோன நிலையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி தனது தந்தை, தங்கையுடன் காரில் சென்ற ஜெனிபரை, நவீன் குமார், அவரது தந்தை உதயகுமார், தம்பி பிரவீன் குமார் ஆகியோர் சேர்ந்து காரை வழி மறித்து தனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு, தங்கையின் உடையை கிழித்து மானபங்கபடுத்தியுள்ளனர். ஜெனிபர் தனது தங்கையின் மானம் காக்க அவரை இறுக்க கட்டிப்பிடித்தபடி ஒரு வீட்டுக்குள் அழைத்துச்சென்று காப்பாற்றியுள்ளார்

பலரது முன்னிலையில் அரங்கேறிய அத்துமீறல் தொடர்பாக மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, நவீன் குமாரின் தந்தை உதயகுமார் காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணிப்புரிவதால் காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தன்மீது விபச்சார வழக்கு போடுவதாக மிரட்டியதாக ஜெனிபர் வேதனை தெரிவித்தார்.

தங்கையின் ஆடையைக் கிழித்து வீதியில் வைத்து தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரங்களை தாங்கள் சமர்ப்பித்தும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கோ, மானபங்கபடுத்திய வழக்கோ பதியாமல் ஆய்வாளர் சிட்டிபாபு, அமைச்சுப் பணியாளர் உதயகுமாரை தப்பவைத்ததோடு, நவீன் குமார், பிரவீன் குமார், கார்த்திக் ஆகியோர் மீது சாதாரண சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் அதனால் தங்களை தாக்கியவர்கள் தற்போது ஜாமீனில் வந்துவிட்டதாகவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஜெனிபர்.

சின்னத்திரை நடிகைகள் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதலில் விழுந்து வில்லங்கத்தில் சிக்கி தவிப்பது தொடர்கதையாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments