ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

0 4917
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் கேப்டன் கே.எல். ராகுல் 60 ரன்களும், கிறிஸ் கெயில் 43 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 17 புள்ளி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments