அகமதாபாத்தில் பத்தே நாட்களிலும் உருவாக்கப்பட்ட 900 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்தே நாட்களில் 900 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத் பல்கலைக்கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அகமதாபாத்தில் தன்வந்தரி கொரோனா மருத்துவமனையை அமைத்துள்ளன. இதில் 150 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உட்பட மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன.
அனைத்துப் படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி உள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோர் பார்வையிட்டனர். பத்தே நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை சனிக்கிழமை முதல் செயல்பட உள்ளது.
Comments