செல்போன் கடை ஊழியரை போதையில் தாக்கிய ராணுவ வீரர்..

0 2188
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ராணுவ வீரர் ஒருவர் போதையில் செல்போன் கடை ஊழியரைத் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ராணுவ வீரர் ஒருவர் போதையில் செல்போன் கடை ஊழியரைத் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான மணிகண்டன் என்பவர், அதே பகுதியிலுள்ள ஜெய் மொபைல் ஷோரூம் என்ற கடைக்கு செல்போன் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மொபைல் ஒன்றை வாங்கியவர், அதன் மீது டெம்பர் கிளாஸ் எனப்படும் திரைப்பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒட்டித் தரக் கேட்டுள்ளார்.

டெம்பர் கிளாஸ் தற்போது கையிருப்பு இல்லை என்று கடை ஊழியர் கூறவே, போதையில் அவரை மணிகண்டனும், அவரது தம்பியும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் உத்தரமேரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments