தஞ்சையில் போலீசாரையும் மாவட்ட ஆட்சியரையும் ஒருமையில் பேசிய பெண் பைபோலார் டிசார்டர் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றவர் எனத் தகவல்
தஞ்சையில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட போலீசாரை ஒருமையில் பேசிய பெண், பைபோலார் டிசார்டர் எனப்படும் இருமுனையப் பிறழ்வு பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், முகக்கவசம் அணியாமல் ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவரை மடக்கி அபராதம் கேட்டனர். அந்தப் பெண், கோபமடைந்து காவலர்களையும் மாவட்ட ஆட்சியரையும் ஒருமையில் பேசிய காட்சி இணையத்தில் வைரலானது.
போலீசார் விசாரணையில் அவர் பைபோலார் டிசார்டர் எனப்படும் இருமுனையப் பிறழ்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. 2 மாதங்களாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு, அதிகமாகவும் சப்தமாகவும் பேசி வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Comments