2017ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

0 4315
2017ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை அக்கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்தனர். பிறகு துணைப் பொதுச்செயலாளராகத் தினகரன் நியமிக்கப்பட்டார். 

இது செல்லாது என 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 2017ல் நடந்த  பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடுத்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நீதிபதி விடுப்பில் இருப்பதால் ஜூன் 18 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments