இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த விராஃபின் (Virafin) என்ற மருந்துக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Pegylated Interferon alpha-2b என்ற மருந்து, ஹெபாடைடிஸ் சி, மெலனோமா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த மருந்தை, விராஃபின் என்ற பெயரில், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியுமா என 3 கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, நல்ல விளைவைக் கொடுத்ததாக ஜைடஸ் கெடில்லா (Zydus Cadila) நிறுவனம் தெரிவித்துள்ளது.
விராஃபின் உடலில் வைரஸ்களின் அளவை வெகுவாகக் குறைப்பதோடு, ஆக்சிஜன் சப்ளையை சார்ந்திருக்க வேண்டிய தேவையைக் குறைப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக ஜைடஸ் கெடில்லா தெரிவித்துள்ளது.
இந்த மருந்தை, சிறுவர்கள் தவிர்த்து, மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த , மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Comments