மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் - மத்திய அரசு
நாடு முழுவதும் மே மற்றும் ஜூன் மாதம் 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி அல்லது கோதுமை தலா 5 கிலோ ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதம மந்திரி கரிப் கல்யான் அன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் வழங்கியதைப் போல், இந்த ஆண்டிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலையின் பாதிப்பை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக, 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments