ஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்... 400 நகரங்களில் சார்ஜிங் முனையங்களை அமைக்க திட்டம்
ஓலா நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்காக நானூறு நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் முனையங்களை அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் 2400 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது.
ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர் தயாரிக்கும் திறன்கொண்ட இதன் முதல் அலகு ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், ஜூலை மாதத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டர் சந்தைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் முனையங்களை அமைக்க ஓலா திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நூறு நகரங்களில் ஐயாயிரம் சார்ஜிங் முனையங்களை அமைத்து வருகிறது.
Comments