பிரிட்டனில் தோட்டங்கள், விளையாட்டுத் திடல்கள் கொண்ட ஸ்டோக்ஸ் பார்க் ஆடம்பர விடுதியை 591 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

0 2307
பிரிட்டனில் தோட்டங்கள், விளையாட்டுத் திடல்கள் கொண்ட ஸ்டோக்ஸ் பார்க் ஆடம்பர விடுதியை 591 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

பிரிட்டனில் தோட்டங்கள், விளையாட்டுத் திடல்கள், ஓய்வு விடுதிகள் கொண்ட புகழ்பெற்ற ஸ்டோக் பார்க்கை ரிலையன்ஸ் நிறுவனம் 591 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளது.

பக்கிங்காம்சயரில் 300 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே 49 படுக்கையறைகளுடன் கூடிய ஆடம்பர விடுதி 200 ஆண்டு பழைமை வாய்ந்ததாகும். தோட்டத்தில் கோல்ப் திடல், 13 டென்னிஸ் ஆடுகளங்கள், 14 ஏக்கரில் அரியவகைத் தாவரங்களுடன் கூடிய பூங்கா ஆகியன உள்ளன.

புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் இங்குப் படம் பிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

விளையாட்டுத் திடல், ஆடம்பர விடுதி, பூங்கா, உடற்பயிற்சியகம், படப்பிடிப்புத் தளம் எனப் பல்வேறு வசதிகள் கொண்ட ஸ்டோக் பார்க்கை ரிலையன்ஸ் நிறுவனம் 591 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments