புதுக்கோட்டை எச்.டி.பி நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கையாடல் - 3 பேர் கைது

0 2269
புதுக்கோட்டை எச்.டி.பி நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கையாடல் - 3 பேர் கைது

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கையாடல் செய்ததாக ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு ராஜவீதியில் செயல்பட்டு வரும் எச்.டி.பி என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தனிநபர் கடன் மற்றும் நகை கடன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தில், கடந்த ஓராண்டாக வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 305 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போனதாக மேலாளர் ராஜேஷ் போலீசில் புகாரளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், நிதி நிறுவனத்தின் நகை மதிப்பீட்டாளர் சோலைமணி உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர். நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments