இளையோருக்கான உலக குத்துச்சண்டைப் போட்டி; 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம்..!

0 2740
போலந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக குத்துச்சண்டைப் போட்டியில் 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம்..!

போலந்து நாட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியில், 7 இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

இளையோருக்கான உலக குத்துச் சண்டைப் போட்டி போலந்து நாட்டின் கீல்ஸ் (Kielce) நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 66 நாடுகளைச் சேர்ந்த 487 வீரர்-வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதில், 48 கிலோ எடைப் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஹரியானா வீராங்கனை கிட்டிகா நர்வால் (Gitika Narwal) போலந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

51 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த Babyrojisana Chanu ரஷ்ய வீராங்கனையை எளிதில் வீழ்த்தினார்.

57 கிலோ எடை பிரிவில் பூனம் பூனியா பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார்.

60 கிலோ எடைப் பிரிவில் அரியானாவைச் சேர்ந்த வின்கா, கஜகஸ்தான் வீராங்கனையைத் தோற்கடித்தார்.

75 கிலோ எடைப் பிரிவில் Thokchom Sanamachu Chanuவும், 69 கிலோ எடை பிரிவில் அருந்ததி சவுத்ரியும், 81 கிலோ எடை பிரிவில் Alfiya Pathan தங்கம் வென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments