2030ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் பாதிப்பை 52 சதவீதம் குறைப்பதாக ஜோ பைடன் உறுதி..!
இன்னும் பத்தாண்டுகளில் அமெரிக்கா கரியமில வாயு பரவலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை 52 சதவீதம் குறைத்துவிடும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய அவர், டிரம்ப் அரசின் கொள்கைகளில் இருந்து விலகுவதாக தெரிவித்த அவர், உலக நாடுகளுக்கு சூழலியல் பாதிப்புகளை குறைப்பதற்கு உறுதியளித்துள்ளார்.
2024ம் ஆண்டு சூழல் பாதிப்பிலிருந்து மீள பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் வருடாந்திர நிதியுதவியை இரட்டிப்பாக்குவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.
Comments