கேரளா சூரிய பேனல் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் மீண்டும் கைது..! காசோலை மோசடி வழக்கில் கைது செய்தது காவல்துறை

0 3497
கேரளா சூரிய பேனல் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் மீண்டும் கைது..! காசோலை மோசடி வழக்கில் கைது செய்தது காவல்துறை

கேரளாவில் சோலார் பேனல் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர், காசோலை மோசடி வழக்கு ஒன்றில் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபர் அப்துல் மஜீத் என்பவருக்கு 42 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு சரிதா நாயர் கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததையடுத்து, அப்துல் மஜீத் தொடுத்த வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் 3 முறை சம்மன் பிறப்பித்தும் சரிதா நாயர் ஆஜராகாததையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வியாழக்கிழமையன்று அவரது இல்லத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments