மே 1 ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்..!

0 4863
தமிழகத்தில் மே 1 முதல் 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி..!

மிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே ஒன்றாம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 45 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு 13 சதவீதமும், 60 வயதுக்கு மேல் 18 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி இலவசமாக தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் அனைத்து மார்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் இலவசமாக தடுப்பூசி வழங்க மே ஒன்றாம் தேதி முதல் முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும்,தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments