8 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய ரவுடி... கல்லால் அடித்து வீழ்த்திய பெண்கள்

0 9466
வியாசர்பாடியில் 8 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து ரகளை செய்த ரவுடியை அங்குள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து மூர்ச்சையடைய செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடியில் 8 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து ரகளை செய்த ரவுடியை அங்குள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து மூர்ச்சையடைய செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பிவிகாலனி 15வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் என்கின்ற அஜய். இவன் மீது வியாசர்பாடி, எம்.கே.பி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 21ம் தேதி அன்று இரவு 8 அளவில் சஞ்சயும், அவரது நண்பர் ஹரிஹரனும் மது குடித்துள்ளனர்.

பின்னர் முழு மது போதையில் பி வி காலணியில் உள்ள ரவுடி சி.சி மணி என்பவரை கொலை செய்வதற்காக சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கத்தியை வைத்துக் கொண்டு எதிரில் வருபவர்களிடம் எல்லாம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வியாசர்பாடி 30 வது தெரு பகுதியில் வந்தபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அங்கிருந்தவர்களை சஞ்சய் மிரட்டியுள்ளார்.

சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவதை கண்டு ஆவேசமடைந்த அங்குள்ள பெண்கள், கீழே கிடந்த கற்களை வீசி சஞ்சையை சராமாரியாக தாக்கியுள்ளனர். இந்த எதிர்பாராதா தாக்குதலால் நிலைகுலைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து சிறுமியை பத்திரமாக மீட்ட பெண்கள், இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற எம்கேபி நகர் போலீசார் சஞ்சயை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சஞ்சய் உடன் வந்த அவரது நண்பன் ஹரிஹரனையும் பிடித்து அடித்து துவைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அடிக்கடி இது போல் தகராறில் ஈடுபடும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments