ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகள், மருந்தகங்களில் அதிரடி ஆய்வு..!

0 3219
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து மருத்துவமனைகள், மருந்தகங்களில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து மருத்துவமனைகள், மருந்தகங்களில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர்.

கொரோனா சூழலில் ஒடிசாவில் மருந்துகள், மாத்திரைகள், முகக்கவசங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு இருப்பு இல்லை எனக் கூறிப் பின் அதிக விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்துக் கடந்த 24 மணி நேரத்தில் மருந்து ஆய்வாளர்கள், காவல்துறையினர் இணைந்து புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகள், மருந்தகங்களில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டுக் கொள்முதல், விற்பனை, இருப்பு ஆகியவற்றைச் சரிபார்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments