இந்தியன் 2 திரைப்பட விவகாரம் - லைகாவும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 3970
இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனமான லைகாவும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமூக தீர்வு காணுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனமான லைகாவும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமூக தீர்வு காணுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியன்-2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்க லைகா நிறுவனம் கோரிய வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments