கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவுடன் தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
கொரானா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட 11 குழுக்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய-மாநில அரசு ஒருங்கிணைப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு வசதி, மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகள், வெளிமாநில தொழிலாளர்கள், கொரோனா தொடர்புகளை கண்டறிதல் மற்றும் தனிமைப் படுத்துதல் என மொத்தமாக 11 ஒருங்கிணைப்பு குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் நடைமுறைக்கு வருகிறது.
எனவே, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்பு தொடர்பாகவும், மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட 11 குழுக்களுக்கு தலைமை செயலாளர் ஆலோசனை வழங்கினார்.
Comments