கொரோனா இரண்டாம் அலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

0 4466

சென்னையில், இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியானவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்த காரணத்தினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதி ஆகும் நபர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு தீவிர அறிகுறி இருப்பதால் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 20 ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் தொற்று பாதித்த 28000 பேரில் 12 ஆயிரத்து 500 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் உள்ளனர். 12000 பேர் வீட்டுத் தனிமையிலும், சுமார் 1700 பேர் கொரோனா கண்காணிப்பு மையங்களிலும் உள்ளனர். ((vgfx out)) இதுவும் கடந்த ஆண்டை விட அதிகமான விகிதத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments