மும்முறை உருமாற்றம் அடைந்த பெங்கால் வகை கொரோனா வைரஸ்: வல்லுநர்கள் எச்சரிக்கை!

0 9907
மும்முறை உருமாற்றம் அடைந்த பெங்கால் வகை கொரோனா வைரஸ்: வல்லுநர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் புதிதாக, மும்முறை உருமாற்றம் அடைந்த பெங்கால் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஏமாற்றி தப்பிவிடும் திறன்கொண்ட இந்த வைரஸ் அதிக தொற்றுத்தன்மை வாய்ந்தது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் உயிரியல் (CSIR-IGIB) ஆய்வு மையமானது, வெளிநாட்டுப் பயணிகள் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறதா என்பதை கண்காணிப்பதோடு, அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு மையமே, இரு முறை உருமாற்றம் அடைந்த இந்திய வகை கொரோனா வைரஸை அண்மையில் கண்டறிந்தது. மகாராஷ்டிரத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த இரு முறை உருத்திரிபு வகை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், உள்நாட்டளவில் மும்முறை உருத்திரிபு அடைந்தது கண்டறியப்பட்டுள்ளது. பெங்கால் வகை என அறிவியலாளர்கள் குறிப்பிடும் இந்த கொரோனா வைரஸ், அதிக தொற்றுத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வகை, ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதித்ததால் உருவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி போட்டதால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்பது வல்லுநர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இன்னும் ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேற்கு வங்கத்தில் நோய்ப் பரவலில் பெங்கால் வகை வைரஸ் விகிதம் அதிகரித்து வருவதாக, சிஎஸ்ஐஆர் உயிரியல் ஆய்வு மையத்தை சேர்ந்தவரும், கொரோனா உருமாற்றங்களை ஆராய்ந்து வருபவருமான வினோத் ஸ்கேரியா தெரிவித்துள்ளார். பெங்கால் கொரோனா வைரஸ், உடலில் ஏற்கெனவே உருவாகியுள்ள நோய்எதிர்ப்பு முறைக்கு தப்பிவிடும் திறன்கொண்ட, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை உருத்திரிபு வைரஸ்களின் பண்புகளை கொண்டிருக்கலாம் என்பது குறித்தும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments