கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை போட்டுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

0 6884

கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அவர், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்டார்.

இதன் பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments