மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் கொரோனாவுக்கு பலி

0 6173

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் 35 வயதான ஆஷிஷ் யெச்சூரி கொரானா பாதித்து உயிரிழந்தார்.

நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெல்லி ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  டெல்லியில் பிரபல நாளிதழ் ஒன்றில் சீனியர் காப்பி எடிட்டராக பணியாற்றி வந்த ஆஷிஷ் யெச்சூரியின் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மகனை இழந்து வாடும் சீத்தாராம் யெச்சூரிக்கும்  குடும்பத்தினருக்கும் இதயபூர்வமான இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments