கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள சிறுவர்களுக்கு மூச்சுப்பயிற்சி... தன்னார்வலருக்கு குவியும் பாராட்டு

0 26556

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள குழந்தைகளுக்கு மூச்சு பயிற்சி உள்ளிட்ட யோகா பயிற்சிகளை தனியார் தொழிற்சாலை பணியாளர் ஒருவர் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆத்தூரைச் சேர்ந்த சாமிநாதன், தான் கற்ற யோகப் பயிற்சிகளில் எளிமையானவற்றை அப்பகுதி சிறுவர்களுக்கு இலவசமாக கற்பித்து வருகிறார். நுரையீரலைப் பாதிக்கும் கொரோனாவை நெருங்க விடாமல் தடுப்பதில் மூச்சுப்பயிற்சி முக்கியப் பங்காற்றுவதாக சாமிநாதன் கூறுகிறார்.

நாள்தோறும் ஆத்தூர் சோமநாதர் சுவாமி கோவில் வளாகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பல்வேறு யோகா பயிற்சிகள், அதன் பின் சிலம்பம், டேக் வேண்டோ, ஸ்கேட்டிங், மற்றும் கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளையும் சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் சாமிநாதன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments