கோவையில் வீட்டில் பதுக்கி வைத்த ரூ.1.80 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்

0 39062

கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர்.

எர்ணாகுளத்தில் கள்ள நோட்டு பதுக்கலில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பிரியன்லாலை கைது செய்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவரிடம் இருந்த  95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.மேலும் பிரியன்லால் அளித்த தகவலின் பேரில் கோவை உக்கடம் அல் அமீன் சாலையில் உள்ள அஸ்ரப் அலி மற்றும் சையது சுல்தான் என்பவரின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சோதனையில் ஒரு கோடியே 80 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments