நாடு முழுவதும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க விமானப்படை விமானங்கள் விரைவு
மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு ஆக்சிஜன் தேவை மிக அதிகளவில் இருப்பதையடுத்து, விரைவாக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன்களை விநியோகிக்க மத்திய அரசு இந்திய விமானப்படையின் உதவியை நாடியுள்ளது.
பாதிப்பு அதிகமாக உள்ள டெல்லி, குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், சட்டிஸ்கர் , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மொத்தம் பத்து லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களையும் மத்திய அரசு இயக்கி வருகிறது. நேற்று லக்னோவில் இருந்து ஏழெட்டு காலி டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்ப சிறப்பு ரயில்கள் பொக்காரோ மற்றும் ஹால்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments