கர்நாடகத்தில் மே 4 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

0 8330
கர்நாடகத்தில் மே 4 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

கர்நாடகத்தில் மே 4 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு அமலுக்கு வந்தது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அனைத்துக் கடைகளும் வணிக நிறுவனங்களும் இரவு 9 மணிக்கு முன்பாக மூட உத்தரவிடப்பட்டதையடுத்து மங்களூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களின் முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து மாநகர காவல் துறை ஆணையர் ரோந்துப் பணியை மேற்கொண்டு ஹூப்ளியை சுற்றி வந்து பார்வையிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments