அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஏற்பாட்டில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு... பிரதமர் மோடி பங்கேற்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக நடைபெறும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
சூழலியலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுள்ள பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்த உள்ளார்.
Comments