"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" :சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 9619
"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" :சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருப்பூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

22 ஆம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், 23 ஆம் தேதி அன்று, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், 24 ஆம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் உள்மாவட்டங்களிலும் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments