பிரேசிலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

0 17887
தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது.

தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது.

தூத்துக்குடிக்கு வரும் சரக்கு பெட்டகங்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பிரேசில் நாட்டில் இருந்து தூத்துக்குடி நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் கொண்டு வந்த கப்பலை அதிகாரிகள் சோதனை இட்டனர்.

ஒரு கன்டெய்னரில் மரத்தடிகளுக்கு இடையே சுமார் 300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 1,500 கோடி ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments