நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி பேச்சு - மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் மறுப்பு

0 5529

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பான புகாரில், பொது அமைதியை கெடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரணையில், முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை தெளிவாக குறிப்பிடவில்லை என்பதால், புதிய மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனுவை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments